மேல் மாகாண ஆளுநர் காரியாலயம்
மேல் மாகாண விவசாயப் பணிப்பாளர் பதவிக்கு   விண்ணப்பங்களைக் கோருதல் 

  1. 1971/17  ஆம் இலக்க 2016.06.15  ஆந் திகதி இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின்  அதி விஷேட வர்த்தமானி பத்திரிகையினால் திருத்தப்பட்ட 1880/26 ஆம் இலக்க 2014.09.19 ஆந் திகதி  இலங்கை விவசாய சேவைகள் யாப்பின் 11.2 உப பந்தி மற்றும் 2064/8 ஆம் இலக்க 2018.03.26 ஆந் திகதி  அதி விசேடவர்த்தமானிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள அதிகார  ஒப்படைப்பிற்கு இணங்க, வெற்றிடமாக உள்ள  இலங்கை விவசாய சேவையின் 1 தரத்தின் மேல் மாகாண விவசாயப் பணிப்பாளர் பதவிக்கு   இங்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
  2. இலங்கை விவசாய சேவையின் 1 தரத்தில் மூன்று (03 ) வருடங்கள் அனுபவமுள்ள விவசாய அபிவிருத்தி துறையின் அலுவகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு கட்டமைப்பு ரீதியிலான நேர்முகப்பரீட்சையின் மூலம் தெரிவு செய்வது இடம் பெறும் ,
  3. கட்டமைப்பு ரீதியிலான நேர்முகப் பரீட்சைக்கு பின்வரும் புள்ளி வழங்கும் ஒழுங்கு முறை அடிப்படையாகக் கொள்ளப்படும்.
  1. மேல் மாகாண விவசாயப் பணிப்பாளர் பதவிக்கான விண்ணப்பத்தினை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ள இயலும். filetype_pdfவிண்ணப்ப
  2. விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் இறுதித் தினம் 2019.09.27 ஆந் திகதியாகும். தமது திணைக்களத் தலைவரின் ஊடாக விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினம் அல்லது அதற்கு முன் , “ மேல் மாகாண ஆளுநரின் செயலாளர் , ஆளுநர் காரியாலயம், 10 ஆம் மாடி. ஜனஜய கட்டடம். இலக்கம் 628 , நாவல வீதி, ராஜகிரிய ” என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட்ட வேண்டும்.
  3. பூரணமற்ற, தெளிவற்ற அல்லது தாமதமாகும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பீ.சோமசிறி
ஆளுநரின் செயலாளர்
மேல் மாகாணம்.
2019.08.26