இலங்கை-சீனா நட்புறவு சங்கத்தின் புகைப்படக் கண்காட்சி சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டு 75 வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் இலங்கை – சீன நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்த நிழற்படக் கண்காட்சி மேல் மாகாண ஆளுநர் திரு ஹனிப் யூசுப் தலைமையிலும் இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் கௌரவ Qi Zhenhong அவர்களின் பங்கேற்புடனும் கொழும்பு பொது நூலகத்தில் இன்று (2024.10.28) ஆரம்பமானது.