கவர்னர் அலுவலகம்

LATEST NEWS

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு கண்காணிப்பு விஜயத்தில் இணைந்தார்

144 வருட நீண்ட வரலாற்றைக் கொண்ட விஹாரமகாதேவி பூங்கா தலைநகரை அலங்கரிக்கும் முக்கிய இடங்களில் ஒன்றாகும்.
 
ஏறக்குறைய 50 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பூங்கா தொடர்பான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதும், பார்வையாளர்களின் வசதியை மேம்படுத்துவதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
 
குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக, விகாரமஹாதேவி பூங்காவில் “சத்துட்டு உயன” காணப்படுவதுடன் அதன் பராமரிப்பு தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
 
சுற்றுச்சூழல் அழகு நிரம்பிய இந்த இடம் நமது நாட்டின் ஒரு சிறந்த வளமாகும்.
 
உக்காத பொலித்தீன், பிளாஸ்டிக் போன்ற கழிவு பொருட்கள் இன்றி சுத்தமான வகையில் இந்த சூழலை பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.