“சுத்தமான இலங்கை” திட்டம் குறித்து மேல் மாகாண சபை அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்.
















ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் கருத்திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் “Clean Sri Lanka” திட்டம் தொடர்பாக மேல் மாகாண சபையின் அதிகாரிகளை தெளிவுபடுத்தும் நிகழ்வு மேல் மாகாண சபை கட்டடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், மேல் மாகாண சபையின் பிரதம செயலாளர், மேல் மாகாண ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்ததுடன்ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் நிகழ்வில் பங்கேற்று தங்களது பங்களிப்பை வழங்கினர். மேல் மாகாணத்தில் வருடாந்தம் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் கொண்டு வருவது மற்றும் மக்களிடமிருந்து கிடைக்கும் பரிந்துரைகளை “Clean Sri Lanka” திட்டத்துடன் இணைப்பது போன்ற விடயங்கள் குறித்து மேல் மாகாண சபையின் அதிகாரிகளை தெளிவுபடுத்துவது இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாக இருந்தது.