சமூக விவகாரங்களுக்காக மீண்டும் கோட்டே மஹிந்தராம சனசமூக மண்டபம் கடந்த கொரோனா காலத்தில் தனிமைப்படுத்தும் மத்திய நிலையமாக பயன்படுத்தப்பட்டு பின்னர் எவ்வித பயன்பாட்டையும் பெற்றுக் கொள்ளாத கோட்டை மஹிந்தாராம சன சமூக நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிக்காக பெறப்பட்டது. பிரதேச மாணவர்களின் வாசிப்பு,விளையாட்டு மற்றும் பெண்களின் மேம்பாட்டிற்கான செயற்பாடுகளுக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களைக் கொண்ட நடவடிக்கைகளுக்காக இந்த சன சமூக நிலையத்தை பயன்படுத்த முடியும்.