கவர்னர் அலுவலகம்

நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்

1978 அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் மாகாண சபைச் சட்டத்தின் கீழ் மாகாண சபை முறைமைக்கு வழங்கப்பட்ட சட்ட அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்துதல்.

  1. நியதிச் சட்டங்கள் மற்றும் பிற சட்ட விடயங்களைத் தயாரிப்பதற்கான கையேட்டைத் தயாரித்தல்.
  2. நியதிச் சட்டங்களை அங்கீகரிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை செயலகப் பணியாட்களுக்கு வழங்குதல்.

வினைத்திறன் மிக்க மாகாண பொது சேவையை பேணிச் செல்லுதல்.

  1. மாகாண தலைவர்களுடன் முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களை நடத்துதல்
  2. மாகாண பயிற்சி நிறுவனங்களால் நடத்தப்படும் பயிற்சித் திட்டங்களை மதிப்பாய்வு செய்தல்.
  3. உத்தியோகத்தர்களின் தொழில்முறை தகுதிகளை மதிப்பிட்டு புலமைப்பரிசில்கள் வழங்கும் முறையை நிறுவுதல்.
  4. மாகாண பொதுச் சேவைத் துறைக்கான ஒழுக்கக் கோவையை உருவாக்குதல்.
  5. ஆளுநரின் செயலாளரின் கீழ் விசாரணைப் பிரிவை நிறுவுதல்.
  6. மாகாணத்தின் உத்தியோகபூர்வ மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதை மீளாய்வு செய்தல்.

மேல் மாகாண ஆளுநர் செயலகத்தின் திறமையான நிர்வாகம் மற்றும் நிதி முறைமையை உறுதிப்படுத்துதல்.

  1. அலுவலகத்திற்கான நிதிக் குறியீட்டை உருவாக்குதல்.
  2. நிர்வாக கையேடு தயாரித்தல்
  3. அனைத்து முக்கியமான விடயங்களுக்கும் சரிபார்ப்புப் பட்டியல் தயாரித்தல்.
  4. முக்கியமான விடயங்கள் தொடர்பாக நடைமுறைகள் மற்றும் தொடர்புடைய படிவங்களுடன் இணையதளத்தைப்  இற்றைப்படுத்தல்.
  5. தினசரி அஞ்சல்களை கணினிமயமாக்கும் ஒழுங்கான முறையை அறிமுகப்படுத்துதல்.
  6. ISO தரநிலைகளை அடைய அலுவலக ஒழுங்கு முறைகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துதல்.

மக்கள் சார்பான சிறந்த ஊழியர் குழாமாக மாறுதல்.

  1. வருடந்தோறும் மாவட்ட மட்டத்தில் நடமாடும் சேவைகளை நடத்துதல்.
  2. ஆளுநர் செயலாளர்களின் கூட்டங்களை காலாண்டுக்கு ஒருமுறை நடத்துதல்.
  3. முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்ள 24 மணிநேரம் நடைமுறையில் உள்ள  தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துதல்.