கவர்னர் அலுவலகம்

LATEST NEWS

நெடுஞ்சாலையில் உயிர்களைக் காப்பாற்ற மேற்கு முன்னணி

வீதி பாதுகாப்பை நோக்காகக் கொண்ட புதிய திட்டம் தொடர்பிலான செயலமர்வொன்று மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதுடன், இன்று நடைபெற்ற “Saving Lives”குழுவிற்கு எல்.ஏ களுகபுஆரச்சி தலைமை தாங்கியதுடன் ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

வைத்தியர்கள், பொலிஸ் அதிகாரிகள், பயணிகள் போக்குவரத்து (மாகாண) அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன், மேல் மாகாணத்தில் வீதி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு உடனடியாக மற்றும் தரமாக முறையில் முன்னெடுக்க வேண்டிய புதிய திட்டத்தை ஆரம்பிப்பது இதன் நோக்கமாக அமைந்தது.

இந்தத் திட்டத்தில் முக்கியமாக சாரதிகளின் நடத்தை, சிறந்த பயிற்சி, சட்டத்திற்கு மதிப்பளித்தல் மற்றும் மக்களுடனான புரிந்துணர்வை மேம்படுத்தல் மற்றும் பொது போக்குவரத்துக்காக பயன்படுத்தும் வாகனங்களின் பாதுகாப்பு, வாகனங்களை பரிசோதிப்பதற்கான திட்டம்,பழைய மற்றும் போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்களை படிப்படியாக அகற்றுதல் மற்றும் போக்குவரத்து தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.