கவர்னர் அலுவலகம்

LATEST NEWS

"சுத்தமான இலங்கை" மேல் மாகாண ஆளுநர் திரு. ஹனிப் யூசுப் மேல் மாகாணத்தில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் தலைவர்களை சந்தித்தார்

“Clean Sri Lanka” மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் மேல் மாகாண பல்பொருள் அங்காடிகளின் தலைவர்களை சந்தித்தார்.
 
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் அண்மையில் (25) ஆளுநர் அலுவலகத்தில் மேல் மாகாணத்தின் பிரதான பல்பொருள் அங்காடிகளின் பிரதிநிதிகளை சந்தித்து, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் “Clean Sri Lanka” வேலைத்திட்டத்திற்கு அமைய மேல் மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
 
இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரால், வர்த்தக நிலைய பிரதிநிதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரதான விடயங்கள்.
 
  1.  பல்பொருள் அங்காடிகளின் கழிவுப் பொருள் அகற்றலுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
  2.  பல்பொருள் அங்காடிகளுக்கு அண்மித்த பகுதிகளில் நுகர்வோருக்கு உகந்த சுற்றுச்சூழலை உருவாக்குதல்.
  3. தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 24 மணித்தியாலங்களும் செயற்படும் பல்பொருள் அங்காடிகளை ஆரம்பித்தல்.
குறிப்பாக இந்த கலந்துரையாடலில் பல பல்பொருள் அங்காடிகளில் காணப்படும் கழிவறைகளை நுகர்வோர் பயன்படுத்துவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஆளுநர் விடுத்த கோரிக்கைக்கு பல்பொருள் அங்காடிகளின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.