ேல் மாகாண வீதி, போக்குவரத்து, கூட்டுறவு அபிவிருத்தி வர்த்தகம், வீடமைப்பு, நிர்மாணம், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களின் தலைமையில் “விஸ்கம் பிரபா -2024 வடிவமைப்புக் கண்காட்சி மற்றும் சந்தை 2024.12.02 மற்றும் மூன்றாம் திகதிகளில் மேல் மாகாண சபை கட்டடத் தொகுதியின் கீழ் மாடியில் ஆரம்பமானது.
இதில் மேல்மாகாண பிரதம செயலாளர் திருமதி தம்மிக்கா கே விஜேசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
கிராமிய மகளிர் பயிற்சி மத்திய நிலைய பெண்களால் உருவாக்கப்பட்ட அழகிய வடிவமைப்புகளை இந்தக் கண்காட்சியில் காண முடிவதுடன் மேலும் அவர்களின் வடிவமைப்புகளை மிகவும் நியாயமான விலையில் கொள்வனவு செய்யவும் முடியும்.
மேல்மாகாண சபை கட்டிடத்தில் மாதத்திற்கு ஒருமுறை இவ்வாறான வடிவமைப்பு கண்காட்சி மற்றும் சந்தையை நடாத்துவதற்கு கிராமிய பெண்கள் பயிற்சி நிலைய வடிவமைப்பாளர்களுக்கு மேல் மாகாண சபையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
அத்துடன் வடிவமைப்பாளர்கள் தமது படைப்புக்களை விற்பனை செய்வதற்கு உரிய இடமொன்றை வழங்குவதற்கும் மேல் மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.