இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் மற்றும் மேல்மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இருதரப்பினருக்கிடையே முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், ஆளுநர் அவர்கள் மேல்மாகாணத்தை கட்டியெழுப்புவது மற்றும் மேல்மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அமெரிக்க தூதுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.