கவர்னர் அலுவலகம்

LATEST NEWS

மேல்மாகாண ஆளுநர் திரு. ஹனிப் யூசுப் மற்றும் இலங்கைக்கான ருமேனியா தூதுவர் திருமதி ஸ்டெலுடா அஹைர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

மேல் மாகாண ஆளுநர் திரு ஹனிப் யூசுப்( Hanif Yusoof) மற்றும் இலங்கைக்கான ருமேனியா தூதுவர் ஸ்டெலூடா அஹயர்( Steluta Arhire) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கான எதிர்கால நோக்கு தொடர்பில் இதன் போது ஆளுநர், தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.
 
இருதரப்பு முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் புதிய அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்பில் தூதுவர் இதன் போது தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.