துருக்கி குடியரசின் தூதுவர் Semih Lütfü Turgut மற்றும் மேல் மாகாண ஆளுநருக்கு இடையிலான சந்திப்பு
துருக்கி குடியரசின் தூதுவர் செம் லுட்பு டர்கட்(Semih Lutfu Turgut) அவர்கள் இன்று (2024.10.23) மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களை சந்தித்தார்.
துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலா தொழில் மற்றும் வர்த்தகத் துறைகளின் தொடர்புகளை மேலும் பலப்படுத்து தொடர்பிலும், இருதரப்பினருக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்புகளை உறுதிப்படுத்துவது தொடர்பிலும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.