கவர்னர் அலுவலகம்

LATEST NEWS

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) நிரந்தர வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுசா குபோடாவிற்கும் மேல் மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) நிரந்தர வதிவிட பிரதிநிதி அசுசா குபோட்டா(Azusa Kubota) அவர்கள் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் (Hanif Yusoof) அவர்களை இன்று கொழும்பு ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார்.
 
ஊழலுக்கு எதிராக போராடும் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் முயற்சியை அவர் இதன் போது பாராட்டினார்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக தற்போது இலங்கையில் செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது தொடர்பில் இதன்போது ஆளுநர் நன்றி தெரிவித்ததுடன், மேல் மாகாணத்தின் அபிவிருத்திக்காக ஒத்துழைப்பு வழங்குமாறும் இதன்போது அழைப்பு விடுத்தார்.