இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரீன் தீ டெம் அவர்களுக்கும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களுக்கும் இடையிலான சந்திப்ப
இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரீன் தீ டெம்(Trinh Thi Tam) அவர்களுக்கும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் (Hanif Yusoof) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (2024.10.23) முற்பகல் மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் பல்வேறு துறைகளின் ஊடாக இரண்டு நாடுகளும் அடைந்துள்ள பிரதிபலன்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இராஜதந்திர மற்றும் சிநேகபூர்வ உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.