புத்தாக்க மற்றும் நவீன கல்வி முறையின் கீழ் திறமையான பிரஜைகளை உருவாக்கும் செயற்திறன் மிகு திட்டங்களை மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் தற்போது முன்னெடுத்து வருகின்றார்.
முஹம்மத் ஹிஷாம் அவர்களின் தன்னார்வ நிபுணத்துவம் மற்றும் தலைமைத்துவத்தை இந்தத் திட்டத்தின் வெற்றிக்காக பயன்படுத்த மேல் மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாணவர்களின் தனிப்பட்ட மேம்பாட்டை மேலும் பலப்படுத்தல், சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தல், தேசிய கலாச்சாரத்தை பாதுகாத்தல், மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் தூய்மையான , பாதுகாப்பான மற்றும் போற்றப்படும் பாடசாலைகளை உருவாக்கும் திட்ட வரைபின்படி இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அடிப்படை விழுமியங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சிறந்த எதிர்காலத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலான கல்வி, சமூகம், கலாசார ரீதியில் மாணவர்களுக்கு வெற்றி நோக்கி பயணிக்க முடியுமான சூழலை உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்திற்கு மேலதிகமாக நடைமுறை சாத்தியமான தீர்வுகள் தொடர்பில் கவனம் செலுத்தி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக் கொண்டு இரண்டாவது செயலமர்வும் நடைபெற்றது.