கவர்னர் அலுவலகம்

LATEST NEWS

மேற்கு மாகாண ஆளுநருக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

மேல்மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பு ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. மேல்மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் அதனை நிர்மாணிப்பதற்கான முன்னோக்குகள் தொடர்பில் ஆளுநர் உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தார். கொழும்புகம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்து முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதே தமது நோக்கமாகும் என ஆளுநர் தெரிவித்தார். ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன்சன்முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கு பொருளாதாரத்தின் வெளிப்படைத்தன்மையை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியதுடன்ஆஸ்திரேலியாவின் ஆதரவு அதன் திறனுக்கு ஏற்றவாறு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.