கவர்னர் அலுவலகம்

உலக சிறுவர் தினத்துடன் இணைந்து வழங்கப்பட்ட சித்திரம் , கைவினை , தெரு நாடக கண்காட்சி மற்றும் திறமை நிகழ்ச்சிகள்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மேல்மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சித்திரம் , கைவினை , வீதி நாடக கண்காட்சி மற்றும் திறமை நிகழ்ச்சி இன்று ( 10. 10. 2024 ) மேல்மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப்  அவர்களின் தலைமையில் கொழும்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலைக்கண்காட்சியை பார்வையிட  அவுஸ்திரேலியஉயர்ஸ்தானிகர் திரு . பால்  ஸ்டீபன்ஸ்  அவர்களும்  இணைத்துக்கொண்டார்.
 
நிறுவனமயமாக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் மேம்பாட்டு மையங்களில் வசிக்கும் குழந்தைகள்  தமது திறன்களை வெளிப்படுத்தினர் . இலங்கையைப் போன்று உலகம் முழுவதிலும் பரந்து இருக்கும்  சிறுவர்கள் உலகில் யுத்த சூழ்நிலை காரணமாக  பல இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர். குழந்தைகளுக்காக என்ற பெயரில் நடக்கும் போர் மோதல்களை நிறுத்த வேண்டும் என்றும் , உலக அமைதிக்காக அனைவரும் ஒன்றுகூடி நிற்க வேண்டும் என்றும்  ஆளுநர் அவர்கள்  கூறினார்.