மேல் மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு வரவேற்கிறோம்.
மேல் மாகாண ஆளுநராக, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய இலங்கையின் துடிப்பான இதயமாக நிற்கும் பிராந்தியத்திற்கு சேவையாற்றுவதில் நான் பெருமையடைகிறேன். எமது மாகாணம் தேசத்தின் பொருளாதார சக்தியாக மட்டுமன்றி பலதரப்பட்ட கலாசாரங்கள், மரபுகள் மற்றும் பல்வேறு புத்தாக்கங்களைக் கொண்ட மாகாணமாகும்.
நிலைபேண்தகு அபிவிருத்தி, பொது சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது நோக்கமாகும்.
எனவே, வர்த்தகம் செய்வதற்கான எளிமை, வேகம் ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் வளர்ச்சி திட்டத்தை உள்ளடக்கிய அணுகுமுறையை வளர்ப்பதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
ஊழலை ஒழிப்பதற்கும், எமது நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். இந்த அடைவுகளுக்கு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது. மேலும், நாம் இணைந்து, மிகவும் சமமான மற்றும் நீதியான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
எங்கள் திட்டங்கள், சேவைகள் மற்றும் வாய்ப்புகள் பற்றி மேலும் அறிய, எமது இணையத்தளத்திற்கு உங்களை அழைக்கிறேன்.
அனைவருக்கும் செழிப்பான மற்றும் இணக்கத்துடனான மேல் மாகாணத்தை கட்டியெழுப்ப உங்கள் பங்கேற்பும் கருத்துக்களும் விலைமதிப்பற்றவை.