கவர்னர் அலுவலகம்

LATEST NEWS

ஆளுநரின் செயலாளரின் செய்தி

இலங்கையின் மேல் மாகாண ஆளுநரின் அலுவலகம் தலைமை அலுவலகமாகச் செயற்படுவதுடன், மேல் மாகாண சபையின் தலைவராக ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளது.

இந்த அலுவலகத்தின் நோக்குமாகாண சபையின் திறமையான நிர்வாகத்திற்கான வழிகாட்டல்களை வழங்குவதில் ஒரு சிறந்த மையமாக இருத்தல்ஆகும். இந்த தொலைநோக்கு மத்திய அரசு மற்றும் மாகாண சபையைச் சுற்றியே சுழலும் தொலை நோக்காகும்.

மேற்குறிப்பிட்ட நோக்கை அடைய வழிசெய்யும் , நிலத்தின் நிலையான அபிவிருத்திக்கான எங்கள் நோக்கம், “சட்ட கட்டமைப்பிற்குள் பயனுள்ள வாடிக்கையாளர் சேவையை மேல் மாகாணத்தில் வழங்குவதை உறுதி செய்வது மற்றும் வழிகாட்டுதல், மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு மூலம் நிலையான வளர்ச்சிக்கு பங்களிப்பதாகும்“. சேவைபெறுநர் / வாடிக்கையாளர் ஒருமித்த கருத்தை திறம்பட செயல்படுத்த நவீன தொழில்நுட்பத்தை மாற்றியமைப்பதன் மூலம் எங்கள் தொலைநோக்கில் அடையாளம் காணப்பட்ட குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளுக்கு ஏற்ப செயல்படுவதே எங்கள் ஒரே இலட்சியம் ஆகும்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மாகாண சபைச் சட்டத்தின் பிரகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் மற்றும் பொறுப்பு ஆகியவை குறிப்பாக இந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன மற்றும் மாகாண பொதுச் சேவைக்கான கடமைகளை நிறைவேற்றும் போது  அதேபோல்  பொதுமக்களுக்கு மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு   எதிர்பார்த்த தகவல்களை வழங்குவதற்காக வசதிகளை வழங்கும்  பணிப்பாளர், நாயகமாக ஆளுநரின் பங்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபை நிர்வாக பொறிமுறையை அமுல்படுத்துவதிலும் இணையத்தளத்தை உருவாக்குவதிலும் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதன் மூலம் “நல்லாட்சி” என்ற அற்புதத்தை நோக்கி முன்னேறும் நடவடிக்கையில் எமது முயற்சிகள் இலங்கையர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நான் மனதார நம்புகிறேன்.