“சுத்தமான இலங்கை” திட்டத்துடன் இணைந்து மட்டக்குளிய காகடுபத கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் நடைபெற்றது




















‘Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் திகதி நடைபெற்ற மட்டக்குளி காக்கை தீவு கடற்கரையை சுத்திகரிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஹரிணி அமரசூர்ய, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
சுத்தமான கடற்கரை மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் “அழகான கடற்கரை கவர்ச்சிகரமான பயணம்”எனும் தொனிப் பொருளில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் ஊடாக மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தை உள்ளடக்கிய 124 இடங்களில் 1740 கிலோமீட்டர் சுத்தீகரிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னர் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் 2024.11.22 ஆம் திகதி காக்கை தீவு கடற்கரைக்கு காண்காணிப்பு விஜயம் மேற்கொண்டதுடன் இதன்போது நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு காக்கை தீவு கடற்கரைக்குள்ள சாத்தியக்கூறுகள் அடையாளம் காணப்பட்டதுடன் அப்பகுதியை ஒரு கவர்ச்சியான சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்வதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.