“சுத்தமான இலங்கை” திட்டத்துடன் இணைந்து பெய்ரா ஏரியை சுத்தம் செய்யும் நன்கொடை.




























ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்திட்டத்திற்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் “Clean Sri Lanka” திட்டத்திற்கு இணையாக கொழும்பு 07 பேர வாவியை சுத்தீகரிக்கும் சிரமதானத்தின் ஆரம்ப நிகழ்வு ஹூனுபிட்டிய கங்காராம விகாரையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் தலைமையில் நடைபெற்றதுடன் தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுண ஆராய்ச்சி மற்றும் தேசிய மக்கள் கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் விராய் கெலீ பல்தஸார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் தேரர்களினால் இவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், வருகை தந்திருந்த பொலிஸ் அதிகாரிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்கள் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.