மேல் மாகாண சபையுடன் அரசியலமைப்பு ரீதியாக இணைக்கப்பட்டுள்ள பல்வேறு அதிகாரங்களுக்கான தலைவர்களை நியமித்தல்
மேல் மாகாண சபைக்கு அரசியலமைப்பின் மூலம் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும் நிகழ்வு மேல் மாகாண ஆளுநர் திரு ஹனீப் யூசுப் தலைமையில் (2024.12.16) நடைபெற்றது.
ஆளுநரினால் மேல் மாகாண சபையின் பல நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள் ஒன்பது பேர் இன்றைய தினம் நியமிக்கப்பட்டதுடன் அவர்களின் விபரம் பின்வருமாறு.
மே மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக திரு யூ எல் காமினி அலெக்செண்டர் பெரேரா,
மேல் மாகாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக திரு ஐ.எம் ஜகத் சந்திர பண்டார,
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக திரு காமினி ஜயசிங்க,
மேல் மாகாண அழகியல் கற்கைகள் நிலையத்தின் தலைவராக திருமதி டபிள்யு.ஏ சுஜீவா,
மேல் மாகாண விவசாய சேவை அதிகார சபையின் தலைவராக திரு என் ஏ ஜகத் அனுரகுமார,
மேல் மாகாண கழிவுப்பொருள் முகாமைத்துவ அதிகார சபையின் தலைவராக திரு கே ஏ டி சத்துர தரங்கா,
மேல் மாகாண சுற்றுலா சபையின் தலைவராக திரு டி.ஜி மகேஷ் பிரியதர்ஷன,
மேல் மாகாண பொருளாதார அபிவிருத்தி சபையின் தலைவராக திரு நாமல் ஏக்கநாயக்க,
மேல் மாகாண தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக திரு வசந்த தேசப்பிரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.