கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் திரு எரிக் வொல்ஷ்(Eric Walsh) மற்றும் மேல் மாகாண ஆளுநர் திரு ஹனீப் யூசுப் (Hanif Yusoof) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று(2024.10.24) கொழும்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
மேல் மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கான குறுகிய கால மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் தொடர்பில் இதன்போது ஆளுநர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன் மனித வளத்தை பலப்படுத்தல் கல்வியை மேம்படுத்தல்,தொழில் முயற்சியாளர்களின் மேம்பாடு தொடர்பில் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.