இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அன்தலிப் எலியஸ்(Andalib Elias) அவர்களுக்கும் மேல் மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அன்தலிப் எலியஸ் (Andalib Elias) அவர்கள் இன்று (2024.10.23) முற்பகல் மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ஹனீப் யூசுப் (Haneef Yusoof) அவர்களை சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் மேம்படுத்துவது தொடர்பிலும், இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.