மேல்மாகாண கெளரவ ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் திருமதி சீதா அரம்பேபொல அவர்கள் கம்பாஹா நகரத்தின் அபிவிருத்தி தொடர்பாக அதிக கவனம் செலுத்துகிறார் – 2020.01.28

அதற்கேற்ப இந்த அபிவிருத்தி திட்டங்களின் முதல் கட்டமாக, கம்பாஹாவில் ஏற்கனவே பாழடைந்த வர்த்தகத்தொகுதிக்குப் பதிலாக புதிய வர்த்தகத்தொகுதியொன்றை நிர்மாணிப்பது தொடர்பாக உரிய தரப்பினரை அழைத்து அது குறித்து ஆரம்ப விசாரணையொன்றை மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு 28.01.2020 அன்று நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலில் ஆளுநர் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலாத்துறை விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க உள்ளிட்ட குழுவொன்று கலந்து கொண்டது.