மேல்மாகாண கெளரவ ஆளுநர் விசேட வைத்திய நிபுணர் திருமதி சீதா அரம்பேபொல அவர்கள் 2020.01.17 ஆந்தேதி திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

அதன்போது ரமுக்கன வித்யாலோக்க கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள குறைபாடுகளை பரிசீலித்ததுடன் அது தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உரிய பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் நிறைவு செய்யப்படாத கட்டிட நிர்மானிப்புகளை விரைவாக  நிறைவு செய்யுமாறும் ஆலோசனை வழங்கினார்.

அதன் பின் வரலாற்றுச் சிறப்புமிக்க பாணந்துறைவாதம் நடைபெற்ற இடத்தினைப் பரிசீலித்ததுடன்  அதன்  வரலாற்றுச் சிறப்பினைப் பாதுகாக்கும் வகையில் அதன் பராமரிப்பு நடவடிக்கைகளை வரைவாக மேற்கொள்ள ஆலோசனை வழங்கியதுடன் அங்கு சுவர்களில் ஓவியம் வரைவதில் ஈடுபட்டிருந்த பிள்ளையினைப் பாராட்டி தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

பாணந்துறை பொதுச்சந்தையினைப் பார்வையிட்டு வர்த்தகர்களுடன் அங்குள்ள சிக்கல்கள் தொடர்பாக கலந்துரையாடி அவற்றுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதியளித்தார்.

அதன் பின் மேல்மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் “சிறுவர்களைப் பொறுப்பேற்கும் நிலையத்தினையும்” திடீர் பரிசீனைக்குட்படுத்தினார்.

அதன் பின் மேல்மாகாண விவசாயத்திணைக்களத்தின் கீழுள்ள “கனன்வில விவசாய மாவட்ட பயிற்சி நிலையத்தினையும்” திடீர் பரிசீனைக்குட்படுத்தினார்.