மேல்மாகாணத்தில் 587 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, அதமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  தலைமையில் கொழும்பு-இலங்கை கேட்போர் கூடத்தில் நேற்று 02ம் திகதி அன்று நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற மேல்மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரிட்சையில் தோற்றிய 15,000 விண்ணப்பதாரிகளுள், முதலாம் கட்டமாகத் தெரிவுசெய்யப்பட்ட 587 பேருக்கு, இதன்போது நியமனம் வழங்கப்பட்டது.  இந்நிகழ்வில் மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் அவர்கள் பஙகேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கினார்.(படம் மாகாண சபை ஊடகப் பிரிவு)

02ம் திகதி கொழும்பு-இலங்கை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாணவர்கள் பாடவிதானங்களில் சிறப்புதேர்ச்சி பெறுவதைப் போன்று, சிறந்த  பிரஜைகளாக உருவாகவும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

இந்த நிகழ்வானது மேல்மாகாணத்தில் இடம்பெற்ற மேல்மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரிட்சையில் தோற்றிய 15,000 விண்ணப்பதாரிகளுள், முதலாம் கட்டமாகத் தெரிவுசெய்யப்பட்ட 587 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குதலாகும்.