உலக முஸ்லீம் லீக் செயலாளர் நாயகம் வருகை

உலக முஸ்லீம் லீக் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா அவர்கள் 2019ம் ஆண்டு ஆடி மாதம் 30ம் திகதி நடைபெறவுள்ள தேசிய சமாதான சக வாழ்வுக்கான தேசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திங்கட்கிழமை மாலை உள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சவுதி பிரமுகர் அல் ஈஸா அவர்களை இம் மாநாட்டின் ஏற்பாட்டாளரான கௌரவ மேல்மாகாண ஆளுநர் எ.ஜே.எம். முஸம்மில் அவர்களும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.எ. ஹலீம் அவர்களும் வரவேற்றனர்.