மேல்மாகாண ஆளுநர் பீடாதிபதி சந்திப்பு

மேல்மாகாண ஆளுநர் எ.ஜெ.எம். முஸம்மில் அவர்கள் மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவ ஶ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரிய பீடாதிபதி வரக்காகொட தம்மசித்தி ஶ்ரீ பஞ்ஞநந்த ஞானரத்ண தேரர், ராமன்ய நிக்காய பீடாதிபதி நாபன பீரேமஶ்ரீ தேரர் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை மரியாதை நிமித்தம் கண்டியில் அவர்களது பீடங்களில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எதிர்வரும் 30ம் திகதி கொழும்பு  தாமரை தடாக அரங்கில் நடைபெறவுள்ள சமாதானம்,  அமைதி மற்றும் சகவாழ்வு மாநாட்டிற்கான அழைப்பிதலை கையளித்து மாநாட்டின் நோக்கங்கள் பற்றியும் அதற்கான ஏற்பாடுகள் பற்றியும் கலந்துரையாடியபோது பிடிக்கப்பட்ட படம்.

இச்சந்திப்பின்போது  தபால்  சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.எ.ஹலீம் மற்றும் மஷுர் மௌலான அவர்களும் உடன் இருந்தனர்.