ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஸ்தானிகர் அகமட்அலி இப்ராஹிம் அல் முல்லா அவர்களின் விஜயம்

மேல்மாகாண ஆளுநர் ஏ.ஜெ.எம் முஸம்மில் அவர்கள் வியாழக்கிழமை அன்று மேல்மாகாண ஆளுநர் பணிமனைக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஸ்தானிகர் அகமட் அலி இப்ராஹிம் அல் முல்லா அவர்களை மரியாதையுடன் வரவேற்றார்.

இரண்டு பிரமுகர்களினதும் கலந்துரையாடல் சுமுகமானதுடன் எதிர்காலத்தில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.

அச்சந்தர்ப்பத்தில் ஸ்தானிகர் ஒரு நினைவுப் பரிசையும் கௌரவ ஆளுநருக்கு வழங்கினார்.